அமெரிக்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 35 வயதான மிச்செல் மெர்கோக்லியானோ என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு 16 வயது மாணவனுடன் உடலுறவு ஈடுபட்டதோடு அந்த மாணவனுக்கு கஞ்சா வாங்கி கொடுத்து அதனை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது 63 குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் மிச்செல் அந்த 16 வயது மாணவருடன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக 12 முறை உடலுறவு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கஞ்சாவையும் வாங்கி கொடுத்து பயன்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆசிரியர் மிச்செல் தன்னுடைய வழக்கறிஞருடன் போலீசில் சரணடைவார் என்று கூறப்படுகிறது.