தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது கச்சத்தீவு விவகாரத்தை மீட்க பிரதமர் மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முதல்வர் கூறினார். அதன் பிறகு மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த அதிமுகவினர் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
அதாவது தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் இது தொடர்பாக பேச வேண்டும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு இருப்பதால் பேச அனுமதி கொடுக்க முடியாது என்று சபாநாயகர் கூறிவிட்டார். இதனால் அதிமுகவினர் யார் அந்த தியாகி என்று கோஷம் எழுப்பினார்.
இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களை சபையிலிருந்து சபாநாயகர் வெளியேற்றியதோடு இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,
எடப்பாடி பழனிச்சாமி தான் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க யார் காலில் போய் விழுந்தாரோ, இதையெல்லாம் பார்த்து நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற இபிஎஸ் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
