
நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ் மோசடி செய்தது தொடர்பாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டுள்ளார். ஒயிட் ஹார்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்குவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மோசடி செய்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வெப்சீரிஸ் எடுப்பதற்காக netflixel கொடுத்த 22 மில்லியன் டாலர் பணத்தில் ஒரு எபிசோடு கூட எடுக்காமல் இருந்துள்ளார்.
மேலும் அந்த பணத்தை வைத்து சொகுசு கார்கள், கிரிப்டோ கரன்சி முதலீடு, ஆடம்பரமான வீடுகளை வாங்கி செலவழித்துள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து netflix நிறுவனம் புகார் அளித்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.