
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமித்து விட்டார். விஜய் தினமும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் விஜயின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ‘Y’ பிரிவு பாதுகாப்பு தொடர்பாக காவல் உள்ளிட்ட 3 துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெறுகிறது. விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய துணை ராணுவ அதிகாரிகள், தமிழ்நாடு போலீசார் ஆலோசனை நடத்துகின்றனர். 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.