மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் பல வருடங்களாக ஒரு வாலிபரை காதலித்து வந்தார். திடீரென அந்த பெண் தன் காதலனை கழட்டி விட்டு வேறொரு வாலிபரை காதலிக்க தொடங்கினார். இது அந்த பெண்ணின் முன்னாள் காதலனுக்கு தெரிந்த நிலையில் மிகவும் கோபம் அடைந்த அவர் தன் காதலியை பழிவாங்க நினைத்தார். இதற்காக அந்த வாலிபர் ஒரு திட்டம் தீட்டி கடந்த 19ஆம் தேதி அந்த பெண்ணின் தம்பியை கடத்தினார். பின்னர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்து விவரங்களை கூறி தான் சொன்ன இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அந்த பெண் அங்கு சென்ற நிலையில் அவரின் தம்பியை முன்னாள் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து அடித்து தாக்கினர். அதோடு அவரை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரையும் அடித்து தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணை முன்னாள் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண்ணை ஒரு வேனில் வைத்து அவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த பெண் நடந்த விவரங்கள் குறித்து போலீஸிடம் கூறினார். மேலும் அவர்கள் வழக்கு பதிவு செய்து பெண்ணை பலாத்காரம் செய்து 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
