கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 18 வயது வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மாணவன் மாணவியை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு மாணவியும் உடன் சென்றார். அவர்கள் இருவரும் பைக்கில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது திடீரென்று பைக்கை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவன் ஓட்டி சென்ற நிலையில் மாணவி அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவி எங்கே அழைத்து செல்கிறாய் என்று கேட்டபோதிலும் வலுக்கட்டாயமாக அவர் மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதைத் தொடர்ந்து மாணவியை அவர் மீண்டும் பைக்கில் அழைத்துச் சென்று வீட்டுக்கு கொண்டு போய்விட்டார். அந்த மாணவி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.