தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சங்கர். இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறார்கள். இவர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில்இயக்குனர் சங்கருக்கு சொந்தமான 10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதாவது எந்திரன் பட கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கர் ரூ.11.5 கோடி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக தான் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் இயக்குனர் சங்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
