சென்னை கிழக்கு கடற்கரை ஈசிஆர் சாலையில் திமுக கொடியுடன் ஒரு சொகுசு காரில் இளைஞர்கள் சிலர் பெண்களை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு காரில் செல்கிறார்கள். அவர்களை திமுக கொடி உள்ள காரில் சென்ற 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பின்னால் துரத்தி சென்று இடைமறிக்க பார்க்கிறார்கள். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் இடுகிறார்கள். இருப்பினும் அந்த இளைஞர்கள் தகராறு செய்து எப்படியாவது அந்த பெண்களை கீழே இறங்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த பெண்கள் அங்கிருந்து காரில் கிளம்பிய போதும் அவர்கள் விடாமல் துரத்தி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும் போது இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததாக கூறியுள்ளனர். அந்த இளைஞர்களின் காரை பெண்கள் சென்ற கார் லேசாக உரசிய நிலையில் அந்த பெண்கள் மன்னிப்பு கேட்காமல் சென்றதால் தான் இளைஞர்கள் துரத்தி சென்றதாக கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கொடி வைத்திருந்தால் என்னத்த குற்றம் வேண்டுமானாலும் பெண்களுக்கு எதிராக செய்யலாம் என்ற துணிச்சலை யார் கொடுத்தது என்று அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Suresh Kumar (@isureshofficial)