மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்சி ராணி வளர்த்த ராட்வீலர் நாய் அவரை கடித்து குதறியது. இதனால் ஜான்சி ராணியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாய்க்கு அருகே கிடந்த துணியை ஜான்சி ராணி எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது நாய் அவரது கையை கடித்து குதறியது. ஜான்சி ராணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி ஜான்சிராணியை மீட்டனர். பின்னர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
