2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சிலர் இதுதான் சரியான முடிவு என்றும் சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நினைத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த துணை கேப்டன் விவகாரம் குறித்து கூறியபோது, “தற்போது இருக்கும் இந்த அணியில் யாரை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நான் சரி தவறு என்று எந்த முடிவையும் சொல்ல முடியாது. ஆனால் சுப்மன தான் கடந்த சீரிசிலும் துணை கேப்டனாக இருந்தார் என்பது சரியாக இருக்கிறது. அதேபோன்று அவர் டெஸ்ட் போட்டிகளிலும் துணை கேப்டனாக இருந்திருக்கிறார்.
எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யார் அணியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதை யோசித்து நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்து இருக்கலாம்” என கூறியுள்ளார்.
