சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வலுநர்களுக்கு இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. சிலர் இதற்கு சரி என்றும் சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது தேர்வு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தற்போது இருக்கும் அணியில் வேறு யாரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

சரி அல்லது தவறு என்று என்னால் எந்த ஒரு முடிவும் சொல்ல முடியாது. ஆனால் அவர்தான் கடந்த சீசனில் துணை கேப்டனாக இருந்தார். நான் தவறாக இருக்கலாம் ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் துணி கேப்டனாக இருந்திருக்கிறார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யார் அணியின் தலைவராக இருக்கலாம் என்பதை பொறுத்து இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் என இருவரில் யார் வேண்டுமானாலும் துணை கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த பொறுப்பை ஆடும் லெவனில் உறுதி செய்யப்பட்ட வீரரிடம் துணை கேப்டன்சி பதவியை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டால் அவர் விராட் கோலி மற்றும் பும்ராவிடம் உதவிகளை பெறலாம் என்று கூறினார்.