மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி அதிக அளவில் ஆன தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளது. முத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த நிலையில் மகராசா முதல்வர் யார் என்பதை பிரதமர் மோடியே முடிவெடுப்பார். முதலமைச்சர் பதவியை நான் விரும்பவில்லை. முதல்வர் பதவி தொடர்பாக நேற்று பிரதமரிடம் பேசினேன். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளேன். பாஜகவின் முடிவுக்கு தடங்கலாக இருக்க மாட்டேன் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்
