தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திராவிட கழக தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திமுக சார்பில் இன்று மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகை ,கல்வி உபகரணங்கள் வழங்குதல், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் மாபெரும் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் திராவிட கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.