தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். சினிமாவில் தயாரிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இதைத்தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அவருக்கு திமுக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இன்று உதயநிதியின் பிறந்தநாள். அவர் தன்னுடைய 47-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், திமுகவினர் உதயநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்தனர். இந்நிலையில் தமிழக பாஜக தற்போது உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை கிண்டல் செய்யும் விதமாக தமிழகத்தின் பொய்யழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
