
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளர். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ம் தேதி விக்ரமாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதோடு, விஜயின் பரபரப்பான பேச்சு தமிழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டை தொடர்ந்து 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தவெக கட்சி தயாராகி வருகிறது. இந்நிலையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று அந்த மாவட்டத்தின் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. அதோடு 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி கூட்டணி ஒரு பக்கமும், அதிமுக மறுபக்கமும், பாஜக கூட்டணி, சீமான் கட்சி போட்டியிடுகின்றன. இந்நிலையில் தவெக கட்சியின் தேர்தல் குறித்து கணிக்க முடியவில்லை. அந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இணையும் அல்லது தனது தலைமையில் ஒரு கூட்டணி அமைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.