தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்டமளிப்பு விழா என்பது அரசியலை தாண்டி நடக்கும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. கூட்டணியில் விவாதங்கள் இருக்கிறது ஆனால் விரிசல்கள் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் விரிசல்களை ஏற்படுத்தும் அளவுக்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது அதிருப்தியில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மோதல் முற்றி கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. திமுக நினைக்கும் அளவிற்கு வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தல் கண்டிப்பாக சுலபமாக இருக்காது. வருகிற தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் நடைபெறும். அந்த கூட்டணியில் பாஜகவின் பங்கும் கண்டிப்பாக இருக்கும் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை பார்த்து திமுக பயப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
