தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூபாத் பகுதியில் ‌ இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து வந்த நிலையில் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 15ஆம் தேதி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி  கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது அவர் உயிர் பிரியும்  சில நிமிடங்களுக்கு முன்பாக தன்னுடைய தம்பிக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதாவது நேற்று ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த பெண் கடந்த 17ஆம் தேதி தன் தம்பிக்கு ராக்கி கயிறு கட்டினார். அதனை கட்டிய சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் உயிர் பிரிந்தது. இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கலங்க வைப்பதாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.