உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையில் பைக் செல்லும்போது ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அந்த வாலிபர்களின் பெயர் சமர் மற்றும் நோமன். இந்நிலையில் அந்த வாலிபர்கள் ரீல்ஸ் எடுத்தவாரே  சென்ற நிலையில் திடீரென பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலமாக ரீல்ஸ் மோகத்தினால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.