சமீப காலமாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உருவாக்கி பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக பலர் தங்களின் உயிரையே இழந்த சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளதை கேள்விப்பட்டு இருக்கிறோம், அதுபோல ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு பெண் குதிரையில் சவாரி செய்தபடி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் திடீரென அந்த பெண் குதிரையிலிருந்து கீழே விழுந்து விடுகிறார்.
அதன் பிறகு வெளியான வீடியோவில் அந்த பெண் முகம் வீங்கியும், பேண்ட் கிழிந்தும், அழுகையுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரியவருகிறது. இந்த வீடியோ ஜூலை 23 ஆம் தேதி அந்த பெண் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார் ..தற்போதுவரை வைரலாகி இந்த வீடியோவை பார்த்து மக்கள் பல்வேறு விதமான எமோஜிகளைப் கிண்டலடித்து பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
