பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களுடன் விண்வெளியில் மிதக்கும் சைக்கி 16 என்ற சிறு கோளை ஆராய நாசா முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறு கோள்கள் பெரிய கோள்களில் இருந்து பிரிந்து வானில் மிதக்க தொடங்கின.

அப்படி உருவான சைக்கி 16 என்ற சிறுகோளை இத்தாலிய வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சுமார் 200 கிலோ மீட்டர் அகலம் கொண்ட சைக்கி 16 என்ற சிறுகோளில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள் அடங்கியுள்ளன. இந்த சிறுகோளில் இருக்கும் தங்கம் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது.