டெல்லியில் கரன் நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து. இதேபோன்று கடந்த 17ஆம் தேதியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி முனீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் முனீஸ் சிறுமியின் கன்னத்தில் அறைந்ததோடு அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர்கள் காவல் நிலையத்தில் முனீஸ் மீது புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். மேலும் இதற்கிடையில் அந்த நபர் சிறுமியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
अमन विहार इलाके में मोनू सक्सेना नाम के डीलर ने एक नाबालिक बच्ची को छत से फेंक दिया इस मामले में अमन विहार थाने के पुलिसकर्मियों पर रिश्वत खाकर सेटलमेंट करने के आरोप लग रहे हैं। @dcprohinidelhi @acpamanvihar @DelhiPolice @AmitShah @BJP4Delhi @yogenderchando1 @CPDelhi @LtGovDelhi pic.twitter.com/Pr3nZRn3TI
— Tehelka Radhika Sharma (@TehelkaRadhika) July 26, 2024
