
கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிலியூர் கிராமத்தில் திருமணம் ஆகி கணவரை பிரிந்த 37 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவருடைய அக்காள் மகனான 16 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அந்த சிறுவன் அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் போலீசார் சிறுவனிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பெண்ணை கொலை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். கொல்லப்பட்ட பெண்ணும் சிறுவனும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சிறுவனுக்கு அந்தப் பெண் மீது மோகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 16 ஆம் தேதி வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்தபோது சிறுவன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். ஆனால் அந்தப் பெண் இடம் கொடுக்காமல் சிறுவனை கண்டித்த நிலையில் சம்பவத்தை வெளியே கூறுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். கொலை செய்யப்பட்ட பெண் அந்த சிறுவனுக்கு சித்தி ஆவார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.