தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரியில் 2.1 மீ, ராமநாதபுரத்தில் 2.3 மீட்டர், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் 2.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் கடற்கரை செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று இரவு 11.30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
