எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறுவோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான சாகச பயணிகள் சிகரங்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கழிவு மேலாண்மை மற்றும் மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.