ராகுல் டிராவிட் தனக்கு அண்ணனை போன்றவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு டிராவிட் என்னிடம் பேசினார். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. அது எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அனைத்து வீரர்களையும் சமமாக பார்க்கும் அவரின் தன்மை என்னை பல நேரம் வியப்படைய வைத்துள்ளது என்று அஸ்வின் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.