இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கையில் ஸ்மார்ட் ஃபோன்கள் இருப்பதால் அதன் மூலமாகவே பணம் அனுப்புவது ,பெறுவது என்பது எளிதாகிவிட்டது. இதற்காக ஏராளமான செயலிகளும் வந்துவிட்டது. ஆனால் மொபைல் ரீசார்ஜ் போன்ற பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது ஏராளமான பேருக்கு தெரியவில்லை. இவ்வாறு பரிவர்த்தனை கட்டணத்தை விதித்தால் பல பயனர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது . இதுகுறித்து லோக்கல் சர்க்கிள் நடத்திய ஆன்லைன் சர்வேயில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. 364 மாவட்டங்களில் இருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்கணிப்பில் தங்களுடைய கருத்து பகிர்ந்து கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 67% பேர் ஆண்கள் மற்றும் 33 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவித்துள்ளது. ஆர்பிஐ வங்கி 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இது குறித்து அறிக்கை வெளியிட்டது. ஒவ்வொரு தொகைகளில் அடிப்படையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூட்டு கட்டணம் இருப்பினும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நிதியமைச்சகம் அதன் பிறகு தெளிவு படுத்தியது. UPI பயனர்களில் 23 சதவீதப் பேர் பரிவர்த்தனை கட்டணம் செலுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இந்த ஆய்வில் கூறியுள்ளனர். 73 சதவீதம் பேர் பரிவர்த்தனை கட்டணம் செயல்படுத்தப்பட்டால் யூபிஐ வசதி பயன்படுத்துவதை நிறுத்தி விடுவோம் என்றும், 50% பேர் ஒவ்வொரு மாதமும் பத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளும் மேற்கொள்வதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
