மக்களவைத் தேர்தல் தேதி வரும் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மக்களவை தேர்தல் தேதி குறித்து அனைத்து மாநிலங்களுடனும் தேர்தல் ஆணைய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தேதியை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.