
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பின்னாடி எத்தனை முஸ்லிம்கள், தலித்துகள் இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான கோடிகளை கொடுத்தவர்கள் யாரு என்பது உங்களுக்கு தெரியும் ? அமீ ரம்ஷா… அதற்கு முன்னாடி பாக்க போனால், 1920 களில் ஜாலியன் வாலாபாக் நடந்துச்சு பாருங்க….
அப்பவே கூட சுபாஷ் சந்திர போஸ் சொன்னபடி சுதந்திரம் வாங்கி இருந்திருக்கலாம். ஆனால் காந்தி அதற்குள் கைதாகி, பல வருடங்கள் நேருவும் – காந்தியும் ஜெயில்ல இருந்து. அதை அனுபவித்து…. ஏன்னா எல்லா வெள்ளைக்காரங்களும் போட்ட போடில்… திருப்பி தாக்கினார்கள் பாருங்க… அந்த எதிர்ப்பில் எல்லாரும் ஓடிப் போயிட்டாங்க…. சரித்திரம் நானும் படிச்சிருக்கேன்.
சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எங்க கட்சி பேனரில் விட்டு போச்சு … அடுத்த முறை நாங்க பேனரில் சேர்த்துருவோம். கட்சியின் லெட்டர் பேடில் இருக்கு. கண்டிப்பா அவருடைய ஆக்கமும், ஊக்கமும் இருக்கு. காந்தியார் இல்லை என சொல்லுறதுஆளுநரின் தனிப்பட்ட சித்தாந்தம். எங்களுடைய கோரிக்கை அதுதான்… நான் யாரையும் நியாயமாகத்தான் பேசுவேன்…
எதற்கும் வேலையும் இல்ல, நிற்க நேரமும் இல்லை என்று சொல்வார்களே… அந்த மாதிரி ஆள் என்றால், இங்குட்டு போறாரு… அங்கிட்டு போறாரு…. இங்க நூறு வண்டி ….அங்குட்டு 100 வண்டி… பெரிய போலீஸ்காரங்க…. பெரிய ராணுவம்…. துணை ராணுவம்…. அங்க போய் பார்த்தால்… 40 வருடத்திற்கு முன்னாடி நான் சென்னைக்கு வந்தப்போ…
கவர்னரை பாக்கணும்னு நேரா போவேன். வருகை பதிவேட்டில் பெயரை எழுதிட்டு உள்ள கூட்டிட்டு போவாங்க, அழகா சால்வை போட்டுட்டு பார்த்துட்டு வருவோம். தனி ஒருவனாக நடந்து போவோம். ஒரே ஒரு ஆள் வெளியே இருப்பான். உள்ள ரெண்டு பேரு இருப்போம்..
இப்ப போய் பாருங்க… இந்தியா, பாகிஸ்தான் பார்டர் மாதிரி.. அதை சுத்தி அடேங்கப்பா எத்தனை பேரிகேட் நூற்றுக்கணக்கா நிக்குது… இங்குட்டு 100 போலீஸ், அங்குட்டு 100 போலீஸ்… அவர் போறாரு… போறாரு… எதுக்கு போறாரு ? ஆளுநருக்கு வெளியே என்ன ? சாமி கும்பிட போறாரு… ஷாப்பிங் போறாரு….இந்த அரசியலை DTI வேரறுக்கும் என ஆதகங்கப்பட்டார்.