
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது என்று எப்ப தெரியும்னா பாஸ் ? களத்துக்கு போகும்போது தான் தெரியும். ஏன்னா மற்றவர்களை விட 1996 ஆம் ஆண்டு முதல் நான் வந்து பிரச்சாரத்துல இருந்திருக்கிறேன் முதல்ல…. எந்த ஒரு இயக்கத்திலும் என்னை இணைத்துக் கொள்ளாமல், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தமாகா இருக்கும்போது அவர்களுக்காக நான் பிரச்சாரம் பண்ணி இருக்கின்றேன்.
40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் பண்ணி இருக்கேன். அப்ப நீங்க எல்லாம் இருந்திருக்க மாட்டீங்க…. உங்களுக்கெல்லாம் தெரிவதற்கான வாய்ப்பு இருக்காது…. அவருக்கு தெரியல… பாவம் சகோதரருக்கு… என்னுடைய உழைப்பு, சைக்கிள் சின்னத்தை எப்படி காமிச்சேன், தாமரையோடு கூட்டணியில் தாமரை சின்னத்தை எப்படி காமிச்சேன், என்னுடைய உழைப்பு ஏதோ சாதாரணமா இன்னைக்கு கட்சி தொடங்கி,
நாளைக்கு முதலமைச்சர் ஆகுற எண்ணம் எனக்கு கிடையாது. என்னை பொருத்தவரைக்கும் நான் உழைத்துக் கொண்டே இருக்கின்றேன். அந்த உழைப்பு தெரிகின்ற காலம் கனிந்து வருகிறது. நீங்க பார்ப்பீங்க… ஒரு நாள் நான் எங்க போய் உக்காருவேனோ, அங்க போய் உட்காருவேன் உங்களுக்கு தெரியும் அப்போ தமிழகத்தில் எங்க வேணும்னாலும், நில்லுங்க தலைவரே, வெற்றி பெற வைக்கலாம் என்று தான் நிர்வாகிகள் என்னிடம் சொல்றாங்க என பேசினார்.