செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்,  சமீபத்தில் பாத்தீங்கன்னா…  மேகதாது அணை சம்பந்தமா வனத்துறையில் உள்ள நிலங்களுக்கு வேறு இடத்திலே மாற்று நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் உரை குடியரசு தினத்தில் கர்நாடகாவில் ஆளுநர் உரைல வந்து இருக்கு…. இது கண்டிக்கத்தக்கது…  சட்டத்துக்கு எதிரான,  உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான…

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான செயல்பாடுகளில்  கர்நாடகா அரசு ஈடுபடுகிறது,  இது கண்டிக்கத்தக்கது…  இதற்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கும் நிலையில்,  தமிழ்நாட்டினுடைய அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் காவேரி படுகையில் ஒரு சின்ன கட்டுமானம் கூட கட்ட முடியாது என்று தீர்ப்பு இருக்கிறது. அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள்…

அதேபோன்று கேரளாவில் ஆளுநர் உரையில் புதிதாக முல்லைப் பெரியாறு அணை கட்டுவோம் என்று கேரளாவில் அறிவித்திருக்கிறார்கள்.  ஆளுநர் உரை…  ஆளுநர் அந்த உரையை பேசல,   ஒரு ரெண்டு நிமிஷம் தான் பேசியிருக்காரு…  தொடக்கத்திலும்,  கடைசிலையும் பேசி முடிச்சிட்டாரு…. ஆனால் இடையில இருக்குறது  வெளியில் வந்ததை பார்த்தால் புதுசா அணை கட்டுவோம் என்று அதுல  ஒரு செய்தி வந்திருக்கிறது.

தீர்மானம் வந்திருக்கிறது. அப்படினால்… இதுக்கெல்லாம் அமைதியான முறையில் இருக்க முடியாது.  ஏன்னா 2014இல்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி,  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிபுணர்கள் அந்த அணைக்கு சென்று,  இந்த அணை இன்னைக்கு கட்டுனா கூட  அதைவிட அணை உறுதியா இருக்கு என்று….  அவங்க எல்லாம் வந்து செய்தி சொல்லிட்டு இருக்காங்க….  அப்ப எதுக்கு இன்னொரு அணை கட்டுவதற்கு ? தேவையே கிடையாது….  அதனால இதையெல்லாம் தமிழக அரசு கொஞ்சம் அதிகமா கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.