மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த காசம்மாள் என்ற மூதாட்டி கடைசி விவசாயி திரைப்படத்தில் விவசாயியாக வரும் முதியவரின் தங்கையாக நடித்திருப்பார். மது போதைக்கு அடிமையான இவருடைய மகன் குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை காசம்மாளை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
