
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ஜனவரி 24இல் திராவிட இயக்கங்கள் மொழி போர் தியாக தினம் என்று சொல்லி… அந்த காலத்தில் யாரெல்லாம் இந்தியாவிற்கு எதிராக…. நம்முடைய அரசாங்கத்திற்கு எதிராக…… வன்முறையில் ஈடுபட்டார்களோ…. மொழிப்போர் என்ற போர்வையில் திருப்பூரில் ஒரு போலீஸ் வேனை கவிழ்த்து, அப்படியே தீ வைத்து எரித்தார்கள்.
மொழிப்போர் அப்படின்ற ஒரு போரில், அந்த காலத்தில் பொது சொத்துகளுக்கு நாசம் விளைத்தவர்கள், அப்பொழுது கைது செய்யப்பட்டவர்கள்…. பழைய திமுக வன்முறையில் ஈடுபட்டவர்களை எல்லாம் மொழிப்போர் தியாகிகள் என்று சொல்லி, அவர்களுக்கு எல்லாம் பென்ஷன்,
அவர்களுக்கு மாதம் தோறும் உதவி தொகை… அதாவது அரசாங்கத்தினுடைய பணத்தை எடுத்து கட்சிக்காரர்களுக்கு கொடுப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ரத்து பண்ண வேண்டும். ஜனவரி 24 மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழ்நாடு முழுக்க எப்பொழுதும் போல, மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு தபால் கார்டு அனுப்புகின்ற நிகழ்ச்சி நடத்த போறோம் என தெரிவித்தார்.