
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, அம்மன் திருக்கோயில்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மாதத்திற்கு 108 மகளிர்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை 18 திருக்கோயில்களில் நடந்துக் கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் கணக்கான மக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த திருவிளக்கு பூஜையிலேயே பங்கேற்று பலன் அடைந்திருக்கின்றார்கள்.
ஆகவே எங்கு பார்த்தாலும் தெய்வங்களுக்கு உண்டான அனைத்து திருவிழாக்களும் மகிழ்ச்சியோடும், திருவிளக்கு ஒளியிலேயே ஒளிப்பெற்று இன்றைக்கு ஆலயங்கள் காட்சி தருவதை பொறுத்துக் கொள்ள முடியாததால் தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
இந்த அவதூறுகளை கண்டு சற்றும் சளைக்காமல் மேலும் முன்பை விட அதிக வேகத்தோடு இறை அன்பர்களுக்கும் திருக்கோயில்களுக்கும் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் முனைப்போடு இந்த ஆட்சி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 627 கோடி ரூபாய் அரசின் சார்பிலேயே மானியம் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.