
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பார்முலா ரேஸ் பண்ணுகிறார்கள். அரசு பணம்… ஓனர் அவுங்க தான்… ஓனர் நினைத்தாலே எப்படி வேணாலும் பண்ணலாம் ? டீச்சர் பாவம் போராடுகிறார்கள்…. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை….. நிதி நிலைமை மோசம் என்று சொல்லி…. இதனை காரணம் காட்டி எந்த விதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது கிடையாது….
ஹாஸ்பிடலில் மருந்து இல்லை…. பெரிய அளவிற்கு வாங்குவதற்கு பணம் இருக்காது. ஆனால் இதற்கெல்லாம் பணம் இருக்கும்… இதற்கு 42 கோடி யாருடைய பணம் ? அவர்கள் அப்பா சம்பாதித்த பணமுமா இது ? போங்க உங்க அப்பாசம்பாதிச்சு வைத்த பணத்தை எடுத்து நீங்கள் செலவு பண்ணி கொள்ளுங்கள். யாரும் கேட்கப் போவதில்லை? 42 கோடி இதற்கு செலவு பண்ண வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?
பார்முலா 4 நடத்துறீங்க… இருங்காட்டு கோட்டையில் நடத்துங்க… இல்ல சோழவரத்துல நடத்துங்க… சோழவரம் ரேஸுக்கு பேமஸ்…அதுவும் ஹார்ட் சிட்டி அது… மவுண்ட் சாலை…. சிவானந்த சாலை….. கொடிமரசாலை…. தலைமை செயலகம் போற வழி என எல்லாம் ஹார்ட் ஆப் தி சிட்டி.மழை பெய்து எந்த நிலைமையில் இருக்கிறது ? செவ்வாய் கிரக மாதிரி அங்க அங்க குண்டு குளியுமாக இருக்கிறது என விமர்சனம் செய்தார்.