சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக ஆட்சியில் நிர்வாக திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்… திட்டமிட்டு பணி செய்யாத காரணத்தினால்….  பொது மக்களுடைய உடமைகள் எல்லாம் இன்றைக்கு தண்ணீரில் அடித்து செல்கின்றது…

கார் இன்றைக்கு மிதந்து கொண்டிருக்கின்ற காட்சியை  தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்…. அண்ணா திமுக ஆட்சியில் 2015ல் மூன்று நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்தது… இப்ப பெய்த மழை மாதிரி இன்னும் கூடுதலா ரெண்டு மடங்கு பெய்தது..  அப்போது பெய்த மூணு மடங்கில் ஒரு மடங்கு அளவு தான் இப்போது மழை பொழிந்திருக்கிறது.

இந்த ஒரு மடங்கு மழையையே இவர்களால் தாக்குப்பிடிக்க முடியல. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியல.  ஆங்காங்கே மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கல… மக்களுக்கு உணவு கிடைக்கல… அப்படிப்பட்ட நிலைமையை நாம் பார்க்கிறோம். அது மட்டும் இல்ல நான் வந்துட்டு இருக்கும்போது ஒரு சில இடத்தில் டிராக்டர் மூலமா தண்ணீரை எடுத்துக் கொண்டு இருக்காங்க.

அந்த டிராக்டருக்கு டீசல் கொடுக்கல…. எதற்காக நீங்கள் இயக்காம இருக்கீங்க என நின்னு போன டிராக்டரிடம் கேட்டோம்?  டீசல் கொடுக்கல என்கிறார்கள்…  இரண்டு மூன்று இடத்தில் டீசல் இல்லாம நிக்குது… அப்படிப்பட்ட நிர்வாக திறமையைச் அரசாங்கம் தான் இந்த அரசாங்கம். அதோட அண்ணா திமுக ஆட்சியில் பல புயலை நாங்கள் பார்த்தோம் என தெரிவித்தார்.