செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , குஷ்பூ அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொழுது எவ்வளவு பெருமைக்குரியவர்களாக… இந்த கட்சியில் வைத்திருந்தோம்.  காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்ற நிலையில் இருந்தார்கள்  இப்ப பாஜக என்ற சாக்கடையில் சேர்ந்ததினால்…

பாஜக, ஆர்.எஸ்.எஸ், பஜிரந்தல் போன்ற எண்ணோட்டங்கள் வந்து விட்டது. அவர்கள்  எண்ணோட்டங்கள் என்ன ? ஜாதி ரீதியான பிரிவுகள், மதரீதியான பிரிவுகள்….  இந்த மாதிரி விஷயங்களில் குஷ்பும்  மாற்று கருத்து இருக்க முடியாது.

பாஜகவில் இருந்தால்  அதனுடைய தன்மையை தான் வெளிப்படுத்தணும். அதனுடைய தன்மையை இன்றைய வெளிப்படையாக  குஷ்பு வைத்திருக்கிறார். அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் SC  பிரிவு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவர்கள் வீட்டை முற்றுகை இட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.