
இந்தியாவில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒரு சில பரிமாற்றங்களுக்கு மட்டுமே வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் வங்கி செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது டிசம்பர் மாதம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் ஆறு நாட்கள் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் பாதிக்கப்படலாம். எந்தெந்த தேதிகளில் எந்தெந்த வங்கிகள் மூடப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
- டிசம்பர் 4– ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
- டிசம்பர் 5 – பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா
- டிசம்பர் 6 – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி
- டிசம்பர் 7 – யூகோ வங்கி மற்றும் இந்தியன் வங்கி
- டிசம்பர் 8 – பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
- டிசம்பர் 11 – இந்த வங்கிகள் தவிர, தனியார் வங்கிகள் வேலை நிறுத்தம்.