
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், புரட்சி தலைவி அம்மா அவர்களின் அ.தி.மு.க ஆட்சியில் 87 மீட்டிங் பேசி இருந்தேன். கடைசி மீட்டிங் கிருஷ்ணகிரியில பேசிய அடுத்த நாள் இன்னொரு வழக்குல கைது செய்யப்பட்டேன். அவங்க ஆட்சியை அனுபவிப்பதில் என்னுடைய சின்ன பங்கு இருந்தது. அப்போ அசைக்க முடியாத ஒரு மாமனிதரா? ஒரு மாந்தரசியா? அம்மா இருந்தாங்க… அவங்கள திட்டமிட்டு தீர்த்து கட்டி, அரசியல் சிரத்தன்மையை குலைப்பதற்க்காக…..
யார் இரும்பு கரம் கொண்டு நசுக்குனாங்க? லேடியா ? மோடியா ? என்ற அந்த வீராங்கனையை… ஆவேசமா பேசி தேர்தலில் வென்ற அந்த வீராங்கனையை… பதவியில இருந்தவங்களை…. அப்பட்டமா…. பட்ட பகலில்… 75 நாள் வச்சி…. அப்பட்டமான முறையில….மர்மமான முறையில…. அதுக்கு நான் வழக்கும் போட்டுருக்கேன்.
அது விஷயமா எல்லாத்துக்கும் அனுப்பி அதுக்கு நெறைய பதில் வந்ததெல்லாம் நான் தான் வச்சிருக்கேன். அது உலகத்துக்கே தெரியும். தமிழ்நாட்டை சீர்குலைக்க அப்படி செஞ்சாங்க…. அப்புறம், முதுகுல சவாரி செஞ்சாங்க…. இப்பவும் நான் அண்ணாமலையை நேர்ல பார்த்ததில்லை….. அண்ணாமலை அவர்கள், ஒரு ஐ.பி.எஸ் படிச்சவங்க. பெரிய படிப்பு படிச்சிருக்காங்க. இந்த வட்டத்துக்குள்ள எல்லாம் வர்ல என தெரிவித்தார்.