
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியில் நிறைய பேர் வருவாங்க. கவுதமி அவர்களும் கட்சிக்காக தன்னுடைய நேரத்தை கொடுத்திருக்கிறார்கள்…. கட்சிக்காக பிரச்சாரங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள்…. அவர்களுடைய உழைப்பு பாராட்ட வேண்டியது. ஆனால் எந்த காரணத்தினால் வெளியில் போயிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு இப்பொழுது தான் செய்தி வந்திருக்கு அது பற்றி விசாரிக்கிறோம்.
அவர்கள் லெட்டர்ல சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தெரியும்.. கூட்டணியில பல தொகுதிகளை சமாதானம் செய்வேண்டி உள்ளது. நானே கூட ராசிபுரம் அல்லது அவிநாசியில் நிற்கணும் என்று தான் விருப்பப்பட்டேன. ஆனால் கூட்டணி காரணங்களால் நான் தாராபுரத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுபோல பல தொகுதிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுல அந்த ஒரு தொகுதியும் கூட்டணியில் போன தொகுதி தான்.
கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் இருக்கிறது. கட்சி சார்பில் கட்சியினுடைய நிர்வாகிகளுக்கு ஊக்குவத்தை கொடுப்பதற்கும், கட்சியினுடைய தலைவருக்கு நடந்தது என்ன ? என்பதை ரிப்போர்ட்டாக கொடுப்பதற்காக மூத்த தலைவர் கொண்ட குழு அமைத்திருக்கிறார்கள். அந்த குழு பார்வையிட்டு அனைத்து தரப்பிலும் விசாரித்து அவர்களுடைய அறிக்கையை எங்களுடைய தேசிய தலைவர் திரு. நட்டாஜீ அவர்களும் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் 9 பாராளுமன்ற தொகுதி என இல்லை. கிட்டத்தட்ட 151 தொகுதி இந்தியா முழுவதும் பாரதி ஜனதா கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் அல்லது குறைந்த வாக்குகளில் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள். கொஞ்சம் புஷ் பண்ணினால் பாரதிய ஜனதா கட்சி ஈசியாக வின் பண்ணக்கூடிய தொகுதிகள். அப்படி 151 தொகுதிகள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதில் ஒன்பது தொகுதிகள் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
அதில் தென் சென்னை இருக்கின்றது. வேலூர் இருக்கின்றது. திருநெல்வேலி இருக்கிறது, கன்னியாகுமரி இருக்கிறது, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு இருக்கிறது. சிவகங்கை இருக்கிறது. ராமநாதபுரம் இருக்கிறது. இதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளாக இருக்கிறது அல்லது சொற்ப வாக்குகளில் நாங்கள் எங்களுடைய வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளாக இருக்கிறது. நீலகிரியில் 1998, 1999இல் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் இருந்த தொகுதி. அதனால்தான் இந்த ஒன்பது தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, இந்த 9 தொகுதிகளில் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, வேலை செய்து கொண்டிருக்கிறோம்.