அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த கட்சியே ஒரு மாற்றமான இயக்கம். கணக்கு கேட்டு வந்த இயக்கம் தான் இந்த இயக்கம். கணக்கு கேட்டு விசில் அடிச்சவுங்க உருவாக்கின இயக்கம் என்று எள்ளி நகையாடியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் இடத்திலே அன்றைக்கு ஊடகப் பெருமக்கள் எல்லாம் கேட்கிறார்கள். அன்றைக்கு இந்த மாதிரி டிவி எல்லாம் கிடையாது. யூடியூப் கிடையாது, facebook கிடையாது, instagram கிடையாது. அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா ?

என் ஆருயிர் நண்பர் எம்ஜிஆர் நடித்த படத்திற்கு நான் கேரண்டி சொல்றேன்….  எம்ஜிஆர் கட்சிக்கு நான் கேரண்டி சொல்ல மாட்டேன். அது ஒரு மாசமோ,  ரெண்டு மாசமோ என்று சொன்னார். அந்த கட்சி தான் இன்றைக்கு 51 ஆண்டு நிறைவு செய்து,  இந்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டு காலம் மக்கள் நம்பிக்கை பெற்ற ஆட்சியாக இருந்து,  மக்களுக்கு சிறந்த திட்டங்களை கொடுத்து வழங்கிய ஒரு கட்சி என்றால் ? உலக வரலாற்றில்…  இந்தியாவிலேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று தான் .

புரட்சி தலைவரை கேலி பேசினார்கள்… கிண்டல் பேசினார்கள்… அலங்காரம்  பூசியவன் அரசியல் பண்ண தெரியுமா ? என பேசினார்கள்.. பத்திரிக்கையில் எல்லாம் எழுதினார்கள்… இவர் எப்படி போய் கட்சி நடத்த முடியும் என்று.. ஆறே மாசத்துல திண்டுக்கல் தேர்தல். அப்போ  சின்னம் 15 நாள்ல தான் கிடைத்தது . இந்த மாதிரி எல்லாம் ரெட்டை இலை அப்ப கிடைக்கல. அந்த சின்னத்தை வரைய முடியல….  மக்கள்கிட்ட கொண்டு போக முடியல.

இன்னைக்கு பாருங்க கட்டவுட், பேனர். அந்த மாதிரி கட்டவுட் எல்லாம் அந்த காலத்துல கிடையாது. பிளக்ஸ் எல்லாம் கிடையாது. எதுவும் கிடையாது. சாதாரண போஸ்டர் தான். பார்த்தீங்கன்னா…  கறிக்கோள்ல தான் சின்னதை  வரையனும், அப்படி வரைந்து…  எந்த கட்சியை புரட்சித்தலைவர் வளர்த்தாரோ, அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து நின்று, ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து,

தமிழ்நாட்டை ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி….  அகில இந்திய அளவிற்கு ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி அன்னை சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க வைத்தவர் தான் புரட்சித் தலைவர், அதுதான் அண்ணா திமுக. அந்த வெற்றி கலசத்தோடு பிறந்தது தான் இந்த இயக்கம்.   இந்த இயக்கம் சாதாரணமாக வரல என தெரிவித்தார்.