அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏதோ ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி அவருடைய தலைமையில் அவர் விரல் நீட்டுகின்றவர் பிரதமராக வரவேண்டும் அல்லது அவரே பிரதமராக வரவேண்டும். எடப்பாடி தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி….  அமையப் போகின்ற கூட்டணி தமிழ்நாடு கூட்டணி.

இந்தியாவிலேயே மூன்றாவதாக பெரிய கட்சியாக பார்லிமெண்ட்ல உட்கார வைத்த தலைவி புரட்சி த்தலைவி அம்மா. மிகப்பெரிய கட்சியாக அங்கீகரித்தார்கள். அப்படிப்பட்ட இயக்கம் வீழ்ந்து விடுமா ?  வீழ்ந்து விடும் என்று கனவு காண்பவர்கள்,  பகல் கனவு காணாதீர்கள்….

அண்ணா திமுக புது உத்தியோகத்துடன்,  புது எழுச்சியோடு,  மீண்டும் எழுந்து வரும். பாராளுமன்ற தேர்தல் நாற்பதில் வெல்லுவோம். 1000 ரூபாய் அனைத்து மகளிர்களுக்கும்,  குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என சொன்னார்கள். குடுத்தாங்களா ? அதிலும் பாதி பேருக்கு  கொடுத்து… கொடுக்காமல்.. பிரச்சினையை இழுத்து…. அங்க வா, இங்க வான்னு சொல்லி….  நொந்து நூலாக்கி அவர்களை…  ரூபாய்யே வேண்டான்னு சில பேர் போய்ட்டாங்க.

சைனா பட்டாசு இந்தியாகுள்ள வருவதை தடுத்த கட்சி அண்ணா தி.மு.க கட்சி. எடப்பாடியார் ஒப்புதலோடு… எங்கள் தலைமையில் சிவகாசி பட்டாசு பாதுகாப்பு பேரவை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி,  பட்டாசுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ,  அங்கெல்லாம் வந்து நாங்க நிற்போம்.கல்வியிலே கடைசி இடத்தில் இருந்த தமிழகத்தை… இந்தியாவிலே  முதல் மாநிலமாக கொண்டு வந்த பெருமையைக்கு  சொந்தக்காரர் புரட்சித் தலைவி அம்மா என தெரிவித்தார்.