நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்தி இயக்கத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரியார் இல்லை.. அண்ணா இல்லை.. கலைஞர் இல்லை…  அவர்களின் வடிவமாக இருக்கின்ற மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதர் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஆக இருந்து, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

நீட்டைப் பற்றி எல்லோரும் இங்கே பேச இருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்ட இக்கட்டில்  இருக்கின்றோம் என்று சொன்னால் ? ஒரு பிரதமர், ஒரு உள்துறை அமைச்சர், இங்கே ஒரு கவர்னர். இவர்கள் பேசுவது எல்லாம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? நீட் தேர்வினால் எந்த பாதிப்பும் இல்லை.  625 பேர் அரசு பள்ளியின் படித்தவர்கள் இன்று தேர்வு பெற்று இருக்கிறார்கள் என்று ஒரு பச்சையான, அபத்தமான ஒரு கூற்றை கவர்னர் சொல்கிறார்.

எடுத்துப் பார்த்தால் ? அந்த 625 பேரும் 7.5% இந்த முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்தின் கீழ் வந்தவர்களே தவிர, நீட்டிலே மெரிட்டில் வந்தவர்கள் அல்ல. அப்படி என்றால் ? சமூக நீதி என்பது இந்த மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உழைத்துக்கொண்டு  இருக்கின்ற இயக்கம்  இந்த நேரத்தில் தொடர்ந்து இந்த போராட்டத்தை  முன் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கின்றது என தெரிவித்தார்.