
செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக… ஒரு தேசிய சித்தாந்தத்தில்…. இந்த தேசத்திற்காக போராடி எத்தனையோ உயிர்களை கொடுத்த இஸ்லாமியர்கள்… இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி போன்ற தேசிய கட்சியை…. 17 மாநிலங்களில் ஆளுகின்ற கட்சியை… மத்தியில் ஆளுகின்ற ஒரு கட்சிக்கு எதிராக ஒரு கொடியை ஏற்றக்கூடாது…. அதுவும் மாநில தலைவர் வீட்டுக்கு முன்னாடி ஏற்றுக்கொள்ள கூடாதுன்னு சொல்லி, ஒரு பத்து பேர் போராடுனாங்கன்னா….
ஒரு பக்கம் ஹிந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவது, இன்னொரு பக்கம் ஹிந்து மக்களுக்கு எதிராக இஸ்லாமிய மக்களை தூண்டி விடுவது, இந்த அரசியல் நாடகத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கின்றோம்.
முஸ்லிம் சிறைவாசி என்று சொல்வதையே நான் உண்மையாக கண்டிக்கின்றேன். அதுவும் திமுக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சட்டமன்றத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் என்று ஏன் நீங்க மதத்தை குறிப்பிடுறீங்க ? என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்போ ஹிந்து சிறைவாசின்னு இதுக்கு முன்னாடி நீங்க விடுதலை செஞ்சீங்களா ? என காட்டமாக பேசினார்.