செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை புதிய தமிழகம் கட்சி கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறது. தென்காசிக்கு உட்பட்ட ராஜபாளையம்,   வாசுதேவநல்லூர்,  சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய சட்டமன்றங்களிலும் கடந்த 16ஆம் தேதி முதல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்களுடைய பயிற்சி முகாமும்,

அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் –  பேரூராட்சி – நகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய கிளை நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழாவும் நடைபெற்று வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாக ராஜபாளையத்தில் என் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நாங்கள் தொடர்ந்து தமிழகத்தில் பரிபூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு விதமான கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

டிசம்பர் மாதம் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியினுடைய 26 வது என்ற ஆண்டு விழாவை தொடர்ந்து….  அந்த 26வது ஆண்டு விழாவை சிறப்பு மாநாடாக பூரண மதுவிலக்கு டாஸ்மார்க் ஒழிப்பு  மாநாடாக நடத்த இருக்கிறோம்.  கடந்த மே மாதம் பத்தாம் தேதி அன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் மற்றும் 19 மதுபான உற்பத்தி ஆலைகளில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.

குறிப்பாக மதுபான உற்பத்தி ஆலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய களால் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அதன் மூலமாகத்தான் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்… ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒட்டு மொத்த அளவில் ஊழல் நடைபெறுகிறது என்று சொல்லியிருந்தேன்.

அதை மெய்ப்பிக்க கூடிய வகையில் கடந்த வாரத்தில் திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களுடைய நிறுவனங்களை ஆய்வு செய்தபோது,  போலி மதுபான  ஆலையை…  அரசினுடைய அனுமதியே இல்லாமல் ஒரு ஆலையை  நடத்தி வந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதைவிட தமிழ்நாட்டில் கேடு என்ன இருக்க முடியும் ? கேவலம் என்ன இருக்க முடியும் ? ஒரு ஆளுங்கட்சியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினரே தமிழ்நாட்டில் போலி மதுபான ஆலையை நடத்தி வருகிறார் என்று சொன்னால் ? அது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுநாள் வரை விளக்கமளிக்காதது என்ன காரணம் ? என தெரிவித்தார்.