தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும் வருமானம் உயர்ந்திருந்தால், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகன பதிவு, பத்திரப்பதிவு குறித்தும், அரையாண்டு அடிப்படையில் தொழில் மற்றும் மின்சார பயன்பாடுகள் குறித்த தரவுகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடியின் பெயருக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.