திமுக செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  வாகனத்திற்கு 5% வரியை உயர்த்தியது எனக்கு வருத்தம் அளிக்குது GST எல்லாம் சேர்த்து ஒரு வாகனத்துக்கு 7,000 , 8,000 ரூபாய் அதிகமாயிடும்.

இன்னைக்கு எல்லா பக்கமும் வரி அதிகமாயிட்டு இருக்கும்போது,  ஒரு புறம் அரசுக்கு 7 லட்சம் கோடிக்கு மேல பற்றாகுறை இருக்கிற சூழ்நிலையில்….  அவர்களுக்கும் வருமானம் தேவைப்படுது. அதே சமயத்துல அவங்களுக்கு வரி போட்டா தான் வருமானம் என்கின்ற நிலை வந்துடுச்சு.

அதனால என்ன பண்றதுன்னு தெரியாது. இதுக்கு அதா…. அதுக்கு இதான்னு தெரியாத அளவுல போய்ட்டு இருக்கு. இருந்தாலும் மக்களின் வேதனைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொன்னது,

அவருடைய கருத்து அவர் கருத்துக்களுக்கு  நான் பதில் சொல்ல முடியாது. இது ஜனநாயக நாடு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து சொல்லுவாங்க. ஒவ்வொரு தலைவர் ஒரு கருத்து சொல்லுவாங்க. அது தேர்தல் களத்தில் இந்த மாதிரி வரும் ? எப்படி வரும்னு அப்ப பாத்துக்க  வேண்டிய விஷயம்  தெரிவித்தார்.