செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கடந்த இரண்டு வருடங்களாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிசாமி இந்த வருஷம் செல்வது குறித்து,  நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.  காரணம் 2021 தேர்தலில்…  ஆட்சி பொறுப்புக்கு வந்தவங்களையே துரோகம் செய்து ஏமாற்றியது மட்டுமல்லாமல்   நான்காண்டு கால ஆட்சியில் தன்னால மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

தன்னுடைய தவறான ஆட்சி தெரிஞ்சுக்கிட்டு…  குறிப்பாக வட தமிழகத்து மக்களை ஏமாற்றுவதற்காக….  குறிப்பாக வன்னிய பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக… 10.5%  உள் ஒதுக்கீட்டை அறிவிச்சாரு. அது கோர்ட்டுக்கு போனால் நிக்காதுன்னு தெரிஞ்சும் அவரு அறிவிச்சாரு.

உண்மையா ஒரு சமுதாயத்துக்கு நல்லது செய்யணும்ன்னா…  நான்காண்டு காலம் ஒரு ஆட்சியில் இருந்தபோது செய்யாமல்… ஆட்சியை விட்டு போற நேரத்துல… தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கிற நேரத்துல….. 10.5% சதவீத இட ஒதுக்கீடு அறிவிச்சாரு. அது வன்னிய பெருமக்களை ஏமாற்றுவதற்காக…

அதுமட்டுமல்ல…  இதனால கிட்டத்தட்ட 109 சமுதாய மக்கள் உள் ஒதுக்கீடு, ஒரு சமுதாயத்திற்கு மட்டும் செய்வது மற்றவர்களை பாதிக்கும் என்கின்ற அச்சத்தில்….  அவர்களெல்லாம் இவருக்கு எதிர்ப்பா மாறினார்கள். இன்றைக்கு வட தமிழகத்திலும் இவர் ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தில் வாழ்கின்ற 109 சமுதாய மக்களுக்கு எதிராக இவர் சுயநலத்தால்…

எடப்பாடி தொகுதியில் ஜெயிக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக….  அவர் செய்த தில்லுமுல்லு மக்களை வெகுண்டெழ செய்தது. அவர் செய்த பெரிய political blunder (  அரசியல் தவறு ). மக்களுக்கு ஏற்கனவே துரோக சிந்தனை உள்ள அவர், ஒரு கண்ணுல வெண்ணையையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வைக்கிற மாதிரி செயல்பட்டது இன்றைக்கு அவருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு பயந்து கொண்டு தான் இரண்டு ஆண்டாக தேவர் குருபூஜைக்கு  வரல அவரு என தெரிவித்தார்.