திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்விக்காக… மாணவர்களுக்காக… நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக…  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். சுகாதாரத்துக்காக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு  மருத்துவமனை என  முதலமைச்சர்கள் ஒவ்வொன்றையும் கலைஞர் நூற்றாண்டில் பார்த்து பார்த்து செஞ்சிட்டு இருக்காரு. நாடே போற்றுகின்ற  கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டத்தை செயல்படுத்தி, ஒரு கோடியே 6,0652,000 மகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சென்ற மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த மாதம்  ஒவ்வொரு மகளிருக்கும்…. அந்த பயனாளிகளுக்கும்…  1  கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் மகளிருக்கு இரண்டாவது  தவணையாக  ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இப்படி எல்லாம் பார்த்து பார்த்து தான் நம்முடைய திட்டங்களை திட்டி வருகின்றோம். ஒன்றிய அரசு இதையெல்லாம் சிதைக்க பார்க்கின்றது.

நீட் தேர்வு…  நுழைவு தேர்வை  கலைஞர் ரத்து செய்தார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முதல் அமைச்சராக  இருக்கும்போது தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரல. அதனால் நீட் தேர்வு எப்படி தமிழ்நாட்டுக்குள்ள வந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் ? நீட் தேர்வை கொண்டு வந்து,  நம் மாணவர்கள்  மருத்துவராகும் கனவை சிதைத்த ஒன்றிய அரசு,  தற்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் தொடங்குவதற்கும், தடை போட்டு உள்ளது. ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே உணவு என மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.