அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், -சேவை மையங்களில் ஆதார், பிறப்பு & இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோல், மகளிர் உரிமை தொகையை பெற மேல்முறையீடு செய்யமுடியாமலும் குடும்ப தலைவிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, சர்வர் கட்டமைப்பை உடனே மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு தொகை வழங்கப்படுகிறது.