நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றுக் கொண்டார். சமந்தா அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடிக்க கமிட்டானார். இதற்கிடையில் அவர் எதிர்பாக்காத சூழலில் மயோசிட்டிஸ் நோய் தாக்கியது .

இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் தற்போது அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவோடு குஷி படத்தில் நடிக்க கமிட் ஆனார்.  இந்நிலையில்  சமந்தா அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்களில் பல செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்து வந்த சமந்தா, கைத்தறி தொழிலாளர்கள் தயாரிக்கும் துணிகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு வருகிறார். தெலுங்கானா அரசு தொடர்பான பல நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் சமந்தா தேர்தலில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.